×

அக்கா, மாமாவை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது

சேந்தமங்கலம், மே 22: எருமப்பட்டி அருகே அக்கா, மாமாவை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே திப்ரமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்(52). சிமெண்ட் செங்கல் வியாபாரம் செய்து வருகின்றார். இவரது மனைவி சுகந்தி(43). இவர்களது மகன் தீபக். நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில், குடிபோதையில் இருந்த ஒருவர் வாந்தி எடுத்ததை தீபக் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த சுந்தியின் தம்பியும் எலக்ட்ரீசியனுமான ராஜசேகர்(34) எதற்காக கோயிலை சுத்தம் செய்கிறாய் எனக்கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால், அங்கிருந்து ஓட்டம் பிடித்த தீபக், வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தன்னை மாமா மிரட்டுவதாக கூறியுள்ளார். உடனடியாக கதிரேசன், சுகந்தி இருவரும் ராஜசேகரிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினார். இதில், காயமடைந்த இருவரும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ராஜசேகரை கைது செய்தனர்.

The post அக்கா, மாமாவை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Erumapatti ,Katiresan ,Thibramadevi ,Namakkal district ,
× RELATED காய்ந்த மரங்களை அகற்ற வலியுறுத்தல்