×

₹2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

சேந்தமங்கலம், மே 22: புதன்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது. ₹2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும் சந்தையில் மாடுகளை வாங்க -விற்க ஆந்திரா மற்றும் கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், உள்ளூர் விவசாயிகளும், வியாபாரிகளும் வருவர். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். தொடர் மழையின் காரணமாக நேற்று கூடிய சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து விற்பனை மாடுகள் குறைந்த அளவே வந்திருந்தது.

அதே வேளையில், மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால், இறைச்சி மாடுகளின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, மாடுகளை வாங்க வெளி மாநில- மாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். கேரளாவில் இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளதால், அங்கிருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால், மாடுகளின் விலை உயர்ந்தது. இறைச்சி மாடுகள் ₹29 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹48 ஆயிரத்திற்கும், கன்றுக்குட்டிகள் ₹18 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆக மொத்தம் ₹2.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

The post ₹2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Puduchattaram ,Dinakaran ,
× RELATED சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்