×

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 8வது நாளாக வேலை நிறுத்தம்

நெய்வேலி, ஆக. 3: நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று 8வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பிரதமர் அறிவித்த ரோஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கடலூர் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நேற்று 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், நெய்வேலி போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

The post 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 8வது நாளாக வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : NLC ,Naiveli ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...