×

கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்: 500 கால்நடைகளுக்கு சிகிச்சை

 

திருத்தணி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. திருத்தணி அடுத்த தாழவேடு ஊராட்சிக்கு உட்பட்டது தும்பிக்குளம் கிராமம் உள்ளது. இதில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் மருத்துவர் சைத்தூன் தலைமை தாங்கினார். முன்னதாக திருத்தணி கோட்ட கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், துணைப் பதிவாளர் பால்வளம் சித்ரா, உதவி பொது மேலாளர் டாக்டர் சொர்ணகுமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கிவைத்தார். இந்த முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினைஊசி, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நோய் தடுப்பு மருந்துகள் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டன.

இதில், 500 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூலூர் எம்.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் பள்ளிபட்டு வடக்கு சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி, சரவணன், திமுக நிர்வாகிகள் தும்பிக்குளம் பூக்கடை கோபி, காஞ்சிபாடி சரவணன், நல்லாட்டூர் கமலநாதன், நாபலூர்குமார், அர்ஜுன் ரெட்டி. மேலும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்ற பொதுமக்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் 4 கிலோமீட்டர் முதல் 5 கிலோமீட்டர் வரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. எங்களுக்கு கால்நடை மருத்துவமனை ஒன்று தொடங்க வேண்டும் என எம்எல்ஏவிடம் கோரிக்கைவைத்தனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்: 500 கால்நடைகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Artist Century Festival Special ,Veterinary Medical ,Camp ,Editani ,Special Veterinary Medical ,Artist Century Festival ,Tiruthani ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...