×

இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் சுருட்டியவர் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் வஉசி தெருவை சேர்ந்த ஸ்ரீவட்சன் விஜயராகவன் என்பவர், கடந்த ஜனவரி 14ம் தேதி தி.நகரில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தன்னை அடையாளம் தெரியாத நபர் செல்போனில் தொடர்பு கொண்டு, பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தனது லைப் இன்சூரன்சை புதுப்பிக்க வேண்டும் என கூறி ரூ.60 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார், என புகார் அளித்தார். இதுகுறித்து சைபர் கரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல், கடந்த ஜூலை 23ம் தேதி சரவணன் என்பவரும், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி 51,016 ரூபாயை பெற்று மர்ம நபர் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார்.

இந்த புகார்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய போது, சென்னை பெரும்பாக்கம் சேரன் நகரை சேர்ந்த முகமது ஜாவித் (33) என்பவர், துரைப்பாக்கத்தில் போலி கால் சென்டர் நடத்தி அதன் மூலம் போலியான முகவரியில் பெற்ற தொலைபேசி எண்களில் இருந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி ெசய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட முகமது ஜாவித்தை அதிரடியாக கைது ெசய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், 12 ஜிஎஸ்எம் வயர்லஸ் போன், 3 செல்போன்கள், 15 சிம்கார்டுகள், 3 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் சுருட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Srivatsan Vijayaragavan ,Vauci Street, MGR Nagar, Chennai ,D. Nagar ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு