×

காஞ்சி, திருக்கழுக்குன்றம், வாலாஜாபாத் பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்: எம்எல்ஏக்கள் வழங்கினர்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிஎம் மேல்நிலைப்பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணா துரை மேல்நிலைப்பள்ளி, திருப்புக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி, முசரவாக்கம் மேல்நிலைப்பள்ளி, புள்ளளூர் மேல்நிலைப்பள்ளி, ஈஞ்சம்பாக்கம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 2,803 மாணவ – மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, அரசு பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் 2803 மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடிகுமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மண்டல தலைவர்கள் சந்துரு, செவிலிமேடு மோகன், சசிகலா கணேஷ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர் திலகர், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் குமார் படுநெல்லிபாபு, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கழுக்குன்றம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் அரசு, பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 427 சைக்கிள்களும், ஆண்கள் பள்ளிக்கு 190 சைக்கிள்களும் என மொத்தம் 617 இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதில், ஒன்றியக்குழுத் துணை தலைவர் பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் ரமேஷ், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் குணசேகரன், எப்சிபா அன்பழகி மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார் நிர்வாகிகள் அரிதினேஷ், இளங்கோ, சுகுமாறன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம், கோவிந்தவாடி அகரம், புள்ளலூர், பரந்தூர் சிங்காடிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் 319 மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு, 319 மாணவ -மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர், பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை குறித்து விளக்கி கூறினார்.

விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வேண்டாமிர்தம் வேதாசலம், லோகு தாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சி, திருக்கழுக்குன்றம், வாலாஜாபாத் பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்: எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Kanchi, ,Thirukkalukunram, ,Walajabad ,Kanchipuram ,Thirukkalukunram ,Kanchipuram Assembly Constituency ,Thirukkakukunram, ,
× RELATED சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த...