×
Saravana Stores

ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சியில் காவடி தயாரிப்பு பணி மும்முரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, காவடி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்திகை நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம் என கொண்டாட்டமாக உற்சவங்கள் நடைபெறும். முருகன் கோயில்களில் எல்லாம் கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கம் விண்ணை எட்டும்.

முருகப்பெருமானுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக் காவடி, சேவல் காவடி, தீர்த்த காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் ஜூலை 29ம்தேதி ஆடி கிருத்திகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் வேங்கை, அத்தி, புங்க மரத்தில் செய்யப்பட்ட பூக்காவடி, உருட்டு காவடி, மடிப்பு காவடி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த, காவடி ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

 

The post ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சியில் காவடி தயாரிப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Kavadi ,Kanchi ,Audi Krithikai ,Kanchipuram ,Kanchipuram Municipal Corporation ,Audi Krittikai ,Aadi Krittikai ,Murugan ,
× RELATED காஞ்சி மண்டல கபடி போட்டி திருமலை பொறியியல் கல்லூரி சாம்பியன்