×

கடற்கரையில் ஒதுங்கியது ‘இஸ்ரோ’ ராக்கெட் பாகம் தான்!: ஆஸ்திரேலியா விண்வெளி நிறுவனம் அறிவிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் ஒதுங்கியது ‘இஸ்ரோ’ ராக்கெட் பாகம் தான் என்று ஆஸ்திரேலியா விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் என்ற இடத்தில், கடந்த ஜூலை 15ம் தேதி இரண்டு மீட்டர் அகலம், மூன்று மீட்டர் உயரம் கொண்ட விநோதமான உலோகம் கரை ஒதுங்கியது. மர்மமான இந்த உலோகம் குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சி, தற்போது அறிக்கையை ெவளியிட்டுள்ளது.

அதில், இந்த உலோகம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) சொந்தமானது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத உலோக பாகம், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரோ இதுகுறித்து இன்னும் எந்தவித விளக்கமும் வெளியிடவில்லை.

The post கடற்கரையில் ஒதுங்கியது ‘இஸ்ரோ’ ராக்கெட் பாகம் தான்!: ஆஸ்திரேலியா விண்வெளி நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Australia Space Agency ,Sydney ,Australian Space Agency ,Australia ,Dinakaran ,
× RELATED இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங்