×

சூளைமேனி ஸ்ரீ எலமாத்தம்மன் கோயிலில் தீ மிதி கோலாகலம்: பக்தர்கள் அக்னிகுண்டம் இறங்கினர்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி கிராமத்தில் உள்ள கிராமதேவதையான ஸ்ரீஎலமாத்தம்மன் கோயிலின் 8ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. இதையடுத்து பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை 7 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தீச்சட்டி ஏந்தி வருதல், தாய் வீட்டு சீதனம் வழங்குதல், பெண் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தும் நிகழ்ச்சி, அடித்தண்டம் போடுதல், காப்பு கட்டிய பக்தர்களுக்கு நா வளகு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்தமாதம் 28ம் தேதி சிவன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் திருவிளக்கு பூஜை, 29ம் தேதி சறுக்கு மரம் ஏறும் விளையாட்டு, பச்சையம்மன் கோயிலில் இருந்து கங்கை திரட்டி அக்னி எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று காப்பு கட்டி, மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் 286 பேர் தீ மிதித்தனர். இன்று அம்மனுக்கு அபிஷேகமும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. சூளைமேனி, பெரம்பூர், லட்சிவாக்கம், தண்டலம், ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

The post சூளைமேனி ஸ்ரீ எலமாத்தம்மன் கோயிலில் தீ மிதி கோலாகலம்: பக்தர்கள் அக்னிகுண்டம் இறங்கினர் appeared first on Dinakaran.

Tags : Choolaimeni Sri Elamathamman Temple ,Mithi Kolagalam ,Agnigundam ,Oothukottai ,Sri Elamathamman temple ,Chulaimeni ,Ellapuram ,Choolaimthi festival ,
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது