×

சிம்லாவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் வீடுகளுக்கு பாதிப்பு: ராம்பூர் பகுதியில் விரிசல் விழுந்த வீடுகளில் சீரமைப்பு பணிகள்

இமாசலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 187 பேர் உயிரிழந்த நிலையில் 34 பேர் காணவில்லை.

சிம்லாவில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக ராம்பூர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.சீரமைப்பு பணிகளை முடக்கியுள்ள உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புகளை துண்டித்தனர். 52 இடங்களில் காட்டாற்று வெள்ளமும் 72 இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்ட நிலையில் சேதமதிப்பு 8 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசம் வந்து சென்ற மத்திய குழுவிடம் நிலுவையில் உள்ள பேரிடர் நிவாரண நிதி ரூ.315 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். இதனிடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சோலன் நான்குவழி சாலை ஒப்பந்ததாரர் மீது சிம்லா முன்னாள் துணை மேயர் திகேந்தர் சிங் பன்வார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமற்ற முறையிலும் விதிகளை மீறியும் சாலைகள் அமைந்ததே நிலச்சரிவுக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

The post சிம்லாவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் வீடுகளுக்கு பாதிப்பு: ராம்பூர் பகுதியில் விரிசல் விழுந்த வீடுகளில் சீரமைப்பு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Shimala ,Rampur ,Himachal Pradesh ,Shimla ,
× RELATED தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில்...