×

தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது

நெல்லை,ஆக.1: சீவலப்பேரி பாலாமடையில் தாய், மகனை தாக்கி மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். சீவலப்பேரி அருகே உள்ள உதயநேரி பாலாமடை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்சங்கர் (27). இவர் கடந்த 30ம் தேதி தனது தாயுடன் தச்சநல்லூர் செல்ல பாலாமடை பெருமாள் கோயில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பண்டாரம் (25), நல்லகண்ணு(22), முப்பிடாதி(23) ஆகியோர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு அவதூறாக பேசிக்கொண்டிருந்தனர். இதைதொடர்ந்து பொதுஇடத்தில் ஏன் இப்படி அவதூறாக பேசிக்கொண்டிருக்கிருக்கிறீர்கள் என மூவரையும் பார்த்து வேல்சங்கர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் வேல்சங்கரையும், அவரது தாயையும் கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வேல்சங்கர் சீவலப்பேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கங்கைகொண்டான் சர்கிள் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி பண்டாரம், நல்லக்கண்ணு, முப்பிடாதி ஆகியோரை கைது செய்தார்.

The post தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Chevalaperi Palamadala ,Chevalaperi ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்