×

பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது

 

மயிலாடுதுறை,ஆக.1: பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை, நேதாஜி உண்டு உறைவிடப்பள்ளியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஊட்டச்சத்து முகாமினை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினார். இதை தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது:

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்தும் விதமாகவும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்திடவும் இந்திய அரசால் 2015ம் ஆண்டில் “பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற நிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் முதன் முதலாக கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், பாலின பாருபாட்டை நீக்கிடவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

The post பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Mayiladududura ,Collector ,Mahabarathi ,Mayeladuthurai ,TN Government ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...