×

கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா சிக்குன்குனியா பாதிப்பு குறைவு: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு’’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிரிக்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறார். திமுக அரசு பதவியேற்கும்போது உச்சத்திலிருந்த கொரோனாவை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மீது கொண்டுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக பீதியை கிளப்பும் வகையில் மக்கள் விரோதப் போக்கை கையாளுகிறார், டெங்கு, மலோரியா நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுறுகிறார்கள் என்று கூறுகிறார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மக்களை காக்கும் பணியை செவ்வனே செய்து வரும் காரணத்தினால் தான் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா பாதிப்பு குறைந்து, கட்டுக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 7 முதல் 10 முறைக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்க்காத மருத்துவமனையில்லை, ஆய்வு செய்யாத ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என்ற நிலையில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் தன்னிறைவுப்பெற்ற மாநிலமாக திகழ்வதை பொறுத்து கொள்ள முடியாத பழனிசாமி வாய்புளித்தது மாங்காய் புளித்தது என்பது போல் மருந்து மாத்திரை பற்றாக்குறை என்று உளறுகிறார்.

தமிழ்நாட்டில் மருந்து கிடங்குகள் இல்லாத மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் புதிய மருந்து கிடங்குகள் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்பெற்று பயன்பாட்டிற்கு வரும் தருவாயில் உள்ளது. இது பற்றியெல்லாம் அறியாது டிஎஎம்எஸ்சி என்று உள்ளதா என்று கேட்பதற்கு காரணம் அரசியல், தேர்தல் தோல்வி பயமாகும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மக்களை கேடயமாக இருந்து காக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் தேவையில்லை.

The post கடந்த ஆண்டை விட தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா சிக்குன்குனியா பாதிப்பு குறைவு: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,Edappadi ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923...