×

வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

சாயல்குடி, ஜூலை 31: முதுகுளத்தூர் அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 7 மூட்டை ரேசன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் பறிமுதல் இருவரை கைது செய்தனர். கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்.ஐ சிவஞான பாண்டியன் மற்றும் முதுகுளத்தூர் டி.எஸ்.ஓ கதிவரன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு கடலாடி, முதுகுளத்தூர் சாலையிலுள்ள முனியன்கோயில் விலக்கு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கண்டிலான் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஒரு மினி வேனை சோதனை செய்ததில் மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதில் 40 கிலோ எடையளவு கொண்ட 7 மூட்டைகள் இருந்தது. இதனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த டிரைவர் வேல்முருகன்(19), வேன் உரிமையாளர் சைவத்துரை(27)ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை அரசு நுகர்பொருள் வாணிப கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டது.

The post வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,Mudugulathur ,Dinakaran ,
× RELATED போக்குவரத்திற்கு இடையூறான மரத்தை அகற்ற மக்கள் கோரிக்கை