×

தமிழர் நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஜூலை 31: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வேப்பந்தட்டையில் தமிழரசு கட்சி, தமிழர் நீதிக்கட்சி, தாயக மக் கள் கட்சி ஆகியக் கட்சிக ளின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை பஸ் நிறுத் தத்தில் தமிழரசு கட்சி, தமி ழர் நீதிக்கட்சி, தாயக மக் கள் கட்சி ஆகியக் கட்சிக ளின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தி ற்கு தமிழரசுக் கட்சியின் துணை பொதுச் செயலா ளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தாயக மக்கள் கட்சி தலை வர் தமிழ்ச்செல்வன், தமி ழர் நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் சுபா. இளவரசன், ஆகியோர் கலந்துகொண்டு நீண்ட நாட்களாக முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவேண் டும், பொது சிவில் சட்டத் தை அமல்படுத்தக் கூடாது, விளைநிலங்களை பறிக் கும் என்.எல்.சி நிர்வாகத் தைக் கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் தமிழரசுக் கட்சி யின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வல்லரசு நன்றி கூறினார்.

The post தமிழர் நீதி கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Justice Party ,Perambalur ,Tamil Nadu Party ,Vepanthattatti ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் நகராட்சியில்...