×

பொது சிவில் சட்ட விவகாரம்; ஒரு கோடி பரிந்துரை வந்துள்ளது!: ஒன்றிய சட்ட அமைச்சர் தகவல்

புதுடெல்லி: பொது சிவில் சட்ட விவகாரம் ெதாடர்பாக ஒரு கோடிக்கும் மேலான பரிந்துரைகள் வந்துள்ளன என்று ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பேட்டியில், ‘பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை, ஆலோசனைகளை ஜூலை 14ம் தேதி வரை பொதுமக்கள் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கான காலக்கெடு ஜூலை 28ம் தேதி (நேற்று முன்தினம்) வரை நீடிக்கப்பட்டது. தற்போது வரை பொது சிவில் சட்டம் தொடர்பாக ஒரு கோடிக்கும் அதிகமான பரிந்துரைகள் வந்துள்ளன.

இந்த பரிந்துரைகளை சட்ட ஆணையம் ஆய்வு செய்யும். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை தொடரும். இனிமேல் காலக்ெகடு நீடிக்க மாட்டாது. சட்ட விவகாரத் துறை, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் அளித்த தகவல்கள், பரிந்துரைகளின் அடிப்படையில் 277 அறிக்கைகளை சட்ட ஆணையம் சமர்ப்பித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன், பொதுசிவில் சட்டம் தொடர்பான ஆக்கபூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும். ெபாது சிவில் சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன’ என்றார்.

The post பொது சிவில் சட்ட விவகாரம்; ஒரு கோடி பரிந்துரை வந்துள்ளது!: ஒன்றிய சட்ட அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Law ,New Delhi ,Union Law Minister ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி