×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,839 கனஅடியில் இருந்து 13,104 கன அடியாக சரிவு: 12,000 கன அடி நீர் திறப்பு

சேலம்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையை வந்தடைந்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கபட்டது. அதன்படி நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 18,052 கனஅடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடபட்டது.

இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 13,939 கன அடியில் இருந்து 13,104 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 29.06 டி.எம்.சி. ஆக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,839 கனஅடியில் இருந்து 13,104 கன அடியாக சரிவு: 12,000 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Kaviri river ,Karnataka ,Mettur dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...