×

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி : ஊட்டி ஆர்சி காலனி பகுதியில் குடியிருப்புகளை ஒட்டியுள்ள கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது பல்வேறு பகுதிகளிலும் கற்பூரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதன்பின், சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் வனத்துறையினரும் பல்வேறு பகுதிகளிலும் இந்த கற்பூர மரக்கன்றுகளை நடவு செய்தனர். தற்போது இந்த மரங்கள் நெடு நெடுவென வளர்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக, மக்கள் வாழும் பகுதிகள், அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் சாலையோரங்களில் இந்த மரங்கள் வளர்ந்துள்ளன. பருவமழையின் போது இந்த மரங்கள் விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, குடியிருப்பு பகுதிகள் அருகே வளர்ந்துள்ள இந்த ராட்சத கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் இந்த மரங்களை அகற்ற தாமதித்து வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள ஆர்சி., காலனி பகுதியில் குடியிருப்புக்களை ஒட்டியே ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த மரங்களை அகற்ற வருவாய்த்துறையினர் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாமல் உள்ளனர். தற்போது, ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், இந்த மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் இந்த கற்பூர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ராட்சத கற்பூர மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Oodi RC ,Dinakaran ,
× RELATED முகப்பருக்கள் உணர்த்தும் பிரச்னைகள்!