×

குந்தாவில் மகசூல் அதிகரிப்பு தேயிலை பறிப்பில் விவசாயிகள் தீவிரம்

மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட 8கூட்டுறவு தொழிற்சாலைகளும் ஏராளமான தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான ஆலைகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2 மாதமாக பரவலான பெய்த மழையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, பெரும்பாலான விவசாயிகளும் தங்களது தோட்டங்களில் உரமிடுதல் போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதால் பசுந்தேயிலை வரத்து வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளின் உற்பத்தி திறனுக்கு மேலாக பசுந்தேயிலை வரத்து காணப்பட்டதால் பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் கடந்த சில வாரங்களாக ‘கோட்டா’ முறை அமல் படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து தினசரி குறிப்பிட்ட அளவிலான பசுந்தேயிலை மட்டுமே விவசாயிகளிடம் இருந்து தொழிற்சாலைகள் பெற்று வருகின்றன். இந்நிலையில், குந்தா பகுதியில் கடந்த சில தினங்களாக சாரல் மழையுடன் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இரவு, பகலாக இடைவிடாமல் வீசும் சூறாவளி காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தேயிலை செடிகளில் அரும்புகள் துளிர் விடும் முன்பே ஓடிந்து விழுகின்றன.

இதனால், வரும் நாட்களில் பசுந்தேயிலை வரத்து படி, படியாக குறையகூடும் என கருதப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை மற்றும் சூறாவளி காற்றையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post குந்தாவில் மகசூல் அதிகரிப்பு தேயிலை பறிப்பில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kunta ,Manjoor ,Gunda ,Manjoor, Nilgiri district ,Dinakaran ,
× RELATED பரமக்குடி பகுதியில் ஓபிஎஸ் தீவிர தேர்தல் பிரசாரம்