×

மோட்டார் திருடிய இருவர் கைது

கோபால்பட்டி, ஜூலை 29: சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் பண அடியான் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் இருந்த மின் மோட்டார் மாயமானது. இதுகுறித்து சாணார்பட்டி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் எஸ்.ஐ ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மின் மோட்டார் திருடியவர்களை தேடி வந்தனர். விசாரணையில், சாணார்பட்டியை சேர்ந்த சிவா, நாகராஜ் ஆகியோர் பணஅடியான் தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post மோட்டார் திருடிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kopalbatti ,Cash Adiyan ,Veerasinnamampatti ,Sanarbatti ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள்...