×

கொடைரோடு அருகே தெருவில் நிறுத்திய டூவீலர்களை இரவில் உடைத்த 3 பேர் கைது

 

நிலக்கோட்டை, ஜூலை 29: கொடைரோடு அருகே, இரவில் ஊருக்குள் புகுந்து தெருவில் நிறுத்தியிருந்த டூவீலரகள், வீடுகளின் முன்பகுதி உள்ளிட்டவற்றை உடைத்து நொறுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியில், கடந்த 24ம் தேதி நள்ளிரவில் புகுந்த ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அந்த தெருவில் உள்ள பொதுதண்ணீர் தொட்டி, வீடுகளின் முகப்பு பகுதி, கதவுகள் உள்ளிட்டவற்றை உடைத்து நொறுக்கினர். அப்போது வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்களையும் அவர்கள் அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து, அதே பகுதியை சேர்ந்த பகவத்சிங் (33) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த சத்திரியன்(23), அருகில் உள்ள ராமன்செட்டியபட்டியை சேர்ந்த அரவிந்தன்(23), குல்லலக்குண்டுவைச் சேர்ந்த பிரேம்குமார்(28) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த ஆதித்யன், திவாகர் உட்பட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

 

The post கொடைரோடு அருகே தெருவில் நிறுத்திய டூவீலர்களை இரவில் உடைத்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kodairod ,Nilakottai ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவில் ஆதார் கார்டுடன்...