×

அஞ்சூர் ஊராட்சியில் வேகத்தடை அமைக்க ₹1.55 லட்சம் செலவு: ஆர்டிஐயில் வெளியான திடுக்கிடும் தகவல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: அஞ்சூர் ஊராட்சியில், வேகத்தடை அமைக்க ₹1.55 லட்சம் செலவானதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே அஞ்சூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் முன்பு, சாலையில் ஊராட்சி சார்பில் கடந்த 2022ம் ஆண்டு, ஜனவரி 24ம் தேதி வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை அமைக்க, அஞ்சூர் ஊராட்சி சார்பில் எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது என்பதை அறிய, அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், அஞ்சூர் ஊராட்சி நிதியில் இருந்து ₹1.55 லட்சம் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையாக செலவழிக்கப்பட்ட தொகை வெறும் ₹27 ஆயிரம் மட்டுமே என்று கூறப்படுகிறது. இந்த முரண்பாடுகளை கண்டு அஞ்சூர் ஊராட்சி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட செல்வியை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு அவர் செய்த துரோகத்தை கண்டு, அஞ்சூர் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். வேகத்தடை அமைப்பதில் நடந்த ஊழல் முறைகேடு குறித்து கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்து, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post அஞ்சூர் ஊராட்சியில் வேகத்தடை அமைக்க ₹1.55 லட்சம் செலவு: ஆர்டிஐயில் வெளியான திடுக்கிடும் தகவல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anjur ,RTI ,Chengalpattu ,Chengalpadu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...