×

ஏற்காட்டில் மலர்கண்காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி கடந்த 22ம் தேதி ெதாடங்கியது. இதனையொட்டி அண்ணாபூங்காவில் 5.5 லட்சம் மலர்களை கொண்டு, காற்றாலை, கடல் வாழ் உயிரினங்கள், டாம் அன்ட் ஜெர்ரி உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை தினமான நேற்று கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையொட்டி, ஏரி பூங்காவில் நாய் கண்காட்சி நடந்தது. இதில் வீடுகளில் வளர்க்கப்படும் விதவிதமான செல்ல நாய்களும், போலீஸ் மோப்ப நாய்களும் கலந்துகொண்டன.

இன்று மாலையுடன் கோடைவிழா நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அனைவரையும் கவர்ந்துள்ள மலர் கண்காட்சியை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மலர்கண்காட்சியை மட்டும் வரும் 30ம் தேதி வரை, 4 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று அறிவித்தார். சேலம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தினமும் ஏற்காட்டை 300 ரூபாயில் சுற்றிப்பார்க்கும் சிறப்பு பேக்கேஜ் பஸ் வசதியும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post ஏற்காட்டில் மலர்கண்காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Yercaud flower show ,Salem ,47th summer festival ,Yercaud ,Salem district ,Anna Park ,
× RELATED ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள அலங்காரங்களில் மலர்கள் புதுப்பிப்பு