×

நாடாளுமன்ற துளிகள்

* கட்சி தாவல் தடை சட்டத்தில் மாற்றமில்லை
அர்ஜூன் ராம் மேக்வால் (சட்ட அமைச்சர்): ஜூலையில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அரசியலமைப்பு மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டத்தில், கட்சி தாவல் தடை சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் 10வது அட்டவணையில் எந்த திருத்தமும் மேற்கொள்ள முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் அதில் எந்த திருத்தம் இருக்காது.

* 30 ஆண்டுகளாக 71,000 வழக்குகள் நிலுவை
நாட்டின் உயர்நீதிமன்றங்களில் கடந்த 24ம் தேதி வரை, 30 ஆண்டுகளாக 71,204 வழக்குகளும், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் கடந்த 30 ஆண்டுகளாக 1,01,837 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றம், 25 உயர்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள் என மொத்தம் 5.02 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

* எம்பிபிஎஸ் சீட் 110% அதிகரிப்பு
மன்சுக் மாண்டவியா (சுகாதார அமைச்சர்): 2014-ல் 51,348 ஆக இருந்த மருத்துவ படிப்புகளுக்கான சீட்களின் எண்ணிக்கை, தற்போது 110% அதிகரித்து 1,07,948 உள்ளது. 2014ல் 31,185 ஆக இருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான எண்ணிக்கை, தற்போது 117% அதிகரித்து 67,802 ஆக உள்ளது. அதே போல், 2014ல் 387 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது அவை 704 ஆக அதிகரித்துள்ளது.

*1,500 வீடற்ற குழந்தைகள் மீட்பு
ஸ்மிருதி இரானி (பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்): குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் 1,551 வீடற்ற குழந்தைகளை மீட்டுள்ளது. அவர்கள் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post நாடாளுமன்ற துளிகள் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Arjun Ram Maghwal ,Speaker ,Om Birla ,Dinakaran ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...