சென்னை: ஐந்து நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 25 லட்சமாக உயர்ந்துள்ளது. மதுபான விற்பனை செய்ய உரிமம் பெரும் கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்ந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 4 நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பதற்கான உரிமம் ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக உயர்ந்துள்ளது. மூன்று நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பதற்கான உரிமம் ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்ந்துள்ளது.
The post ஐந்து நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 25 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.
