×

பாமணி அரசு பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி திடீர் ஆய்வு

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 28: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம், மாணவர்கள் எவ்வாறு தேர்வை எதிர்கொள்வது, எப்படி பாடங்களை பிரித்துப் படிப்பது, ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும். படிப்பது மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். பெற்றோரிடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை மதித்து அவர்கள் வழிகாட்டல்களை பின்பற்றுவது, தனக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் எப்படி பொறுப்புள்ளவராக நடந்து கொள்வது, மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஏற்ப வாழ வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அப்போது பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்தண்ணா, ஆசிரியர்கள் மணிவேலன், சக்திராஜ், சத்தியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post பாமணி அரசு பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Bamani Government School ,Tiruthurapoondi ,Union Bamani Government High School ,Tiruvarur ,District Primary Education ,Education ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டி -திருவாரூர் தேசிய...