×

விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது

 

கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி பேசும்போது, அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நம்மாழ்வர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற ஒரு விவசாயி குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மை சாகுபடி செய்தும், மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக அங்கக வேளாண்மையில் ஈடுபட்டும், மேலும் அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வெற்றி பெறும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருதுடன் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பரிசுகளும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10,000 மதிப்புடைய பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7000 மதிப்புடைய பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5000 மதிப்புடைய பதக்கம் வழங்கப்படும் என்றார்.

The post விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது appeared first on Dinakaran.

Tags : Mahabharathi ,
× RELATED மயிலாடுதுறையில் 226 பள்ளி வாகனங்கள் தணிக்கை: கலெக்டர் தலைமையில் நடந்தது