×

நைஜர் நாட்டில் திடீர் புரட்சி: அதிபரை சிறைபிடித்து ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

நியாமி: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ராணுவத்தினர் திடீரென புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் முகமது பாசுமை அவரது பாதுகாவலர்களே சிறைபிடித்தனர். அவரை அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்று அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் நேற்று தோன்றிய வீரர்கள் குழு கூறியதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என ராணுவ வீரர்கள் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர். அதிபருக்கு ஆதரவாக தலைநகர் நியாமிவில் மக்கள் பெருந்திரளாக திரண்டனர்.

நியாமியில் ஒன்று கூடிய மக்களை விரட்டியடிக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. னாலும் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. 1960ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து நைஜர் விடுதலை அடைந்த காலம் முதல் அரசியல் வன்முறைகளால் அந்நாடு சீர்குலைந்து போனது. இதற்கு முன்னர் 4 முறை ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளன. 2010ம் ஆண்டு அப்போதைய அதிபர் மாமடோ தஞ்சா தலைமையிலான ஆட்சியை ராணுவம் தூக்கி எறிந்தது. 2021ம் ஆண்டு முதல் அதிபராக முகமது பாசும் பதவியில் இருந்து வருகிறார்.

ஜிஹாதிகளின் ஆயுத கிளர்ச்சியையும் அண்மை காலமாக நைஜர் நாடு எதிர்கொண்டு வந்தது. தலைநகர் நியாமியில் இருந்து 100 கிமீ தொலைவில்தான் அல் கொய்தா மற்றும் ஐஎஸ் ஆதரவு பெற்ற ஜிஹாதிகளுக்கு இடையேயான மோதல் நடந்தும் வருகிறது. நைஜர் நாட்டின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

The post நைஜர் நாட்டில் திடீர் புரட்சி: அதிபரை சிறைபிடித்து ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் appeared first on Dinakaran.

Tags : Sudden revolution in ,Niger ,Niamey ,President ,Mohammed Basumi ,Dinakaran ,
× RELATED நைஜரில் இருக்கும் இந்தியர்கள்...