×

மதுரையில் மின் கம்பம் விழுந்து ஜூடோ விளையாட்டு வீரரின் கால் முறிந்த விவகாரத்தில் மின் ஊழியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: மதுரையில் மின் கம்பம் விழுந்து ஜூடோ விளையாட்டு வீரரின் கால் முறிந்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை கோச்சடைப் பகுதியை சேர்ந்தவர் பரிதி விக்னேஸ்வரன். ஜூடோ விளையாட்டில் பதக்கங்கள் பல குவிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார். தந்தை இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளியான தாய், தம்பியின் ஒரே நம்பிக்கை பரிதி விக்னேஸ்வரன் தான். கனவுகளோடு மாநில அளவிலான ஜூடோ போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவன், தன் நண்பர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது தான் விபரீதம் நிகழ்ந்தது.

பழுதடைய மின்மாற்றியை கிரேன் மூலம் மின்வாரிய ஊழியர்கள் மாற்றியுள்ளனர். அப்போது கயிறு அறுந்து 3 டன் எடைக்கொண்ட அந்த மின் கம்பம் மாணவன் பரிதியின் காலில் விழுந்து அவரது கால் நசுங்கி துண்டாகியுள்ளது. தற்போது கால் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக தயாராகி வந்த பரிதி விக்னேஸ்வரன், மின் ஊழியர்களின் அலட்சியத்தால் காலை இழந்தது அவரின் குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. பழுதாகி சேதமடைந்த மின் கம்பத்துக்கு மாற்றாக வேறு புதிய மின் கம்பம் நடும் பணி நடைபெற்று வந்துள்ளது. முன்னறிவிப்பு இன்றி பணியில் ஈடுபட்ட மின் ஊழியர் உட்பட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post மதுரையில் மின் கம்பம் விழுந்து ஜூடோ விளையாட்டு வீரரின் கால் முறிந்த விவகாரத்தில் மின் ஊழியர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...