×

டிராக்டர் மீது கார் மோதி 2 பெண்கள் பலி

நெல்லை: திசையன்விளை அருகே டிராக்டர் மீது கார் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். திசையன்விளை புலிமான்குளத்தில் இருந்து 12 பேர் முன்னோர்களுக்கு திதி கொடுக்க டிராக்டரில் கன்னியாகுமரிக்கு சென்றனர். கன்னியாகுமரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது கிழக்கு கடற்கரை சாலையில் டிராக்டர் மீது கார் மோதியது. தோட்டாவிளை என்ற இடத்தில் நடந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த சந்தானகுமாரி, முத்துச்செல்வி உயிரிழந்தனர்.

The post டிராக்டர் மீது கார் மோதி 2 பெண்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Nellai ,Vektianvilai ,Veketyanvilai Pulimankulam ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். தலைவர் மரண வாக்குமூலம்...