×

நெல்லையில் மேலும் ஒரு வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி

நெல்லை: பாபநாசம் பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை, வனத்துறை கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து, பாபநாசம், வி.கே.புரம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் யானை, மிளா, சிறுத்தை, கரடி ஆகியவை ஊருக்குள் புகுந்து, நாய், ஆடு, மாடுகளை கடித்து குதறுவதோடு, விளைநிலங்களில் புகுந்து நெல், கரும்பு பயிர்களையும் சேதப்படுத்துகின்றன. அந்த வகையில் கடந்த 16ம் தேதி அதிகாலை வி.கே.புரம் அருகே வேம்பையாபுரம் சிவசங்கர் (43) என்பவரது வீட்டு முன்பு கட்டிப் போடப்பட்டிருந்த ஆட்டையும், அனவன்குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது ஆட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆட்டையும் சிறுத்தைகள் தாக்கி, வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது.

இதைத் தொடர்ந்து மோப்பநாய் ரெக்ஸ் உதவியுடன் வனத்துறையினர் ஆய்வு செய்ததில் 2 பகுதிகளிலும் ஆடுகளை இழுத்துச் சென்றது, வெவ்வேறு சிறுத்தைகள் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில் அனவன் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டிலும் நேற்று இரவு ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. தொடர்ந்து இன்று அதிகாலையும் ஒரு சிறுத்தை சிக்கியது. ஒரே வாரத்திற்குள் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியில் 3 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. இந்த சிறுத்தைகள் கோதையாறு வனப்பகுதியில் விடப்படும் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

The post நெல்லையில் மேலும் ஒரு வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Babanasam ,Nella district ,Papanasam ,V. K. Elephant ,Mila ,Puram ,Anawankudiyirpu ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது