×

வத்தலக்குண்டுவில் புனித சந்தன மாதா சப்பர பவனி

வத்தலக்குண்டு, ஜூலை 27: வத்தலக்குண்டு பெத்தானியாபுரத்தில் பிரசித்தி பெற்ற புனித சந்தன மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை மாதா கோயிலில் பங்குத்தந்தை எட்வின்ராஜ், துணை பங்குத்தந்தை பால்ராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். தொடர்ந்து மேள, தாளம் முழங்க வான வேடிக்கையுடன் புனித சந்தன மாதா மின்சப்பரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

பெத்தானியாபுரத்தில் இருந்து புறப்பட்ட பவனி, திண்டுக்கல் சாலை வந்ததும் வானதூதர் புனித சந்தன மாதாவுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பவனி காளியம்மன் கோயில் பகுதி, மார்க்கெட், கடைவீதி, பிலீஸ் புரம், பெரியகுளம் ரோடு, பஸ் நிலையம், மெயின்ரோடு வழியாக சென்று மீண்டும் பெத்தானியபுரம் சென்று நிறைவடைந்தது. பவனி வந்த மாதாவை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஊர் மக்கள், அன்னை தெரசா இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

The post வத்தலக்குண்டுவில் புனித சந்தன மாதா சப்பர பவனி appeared first on Dinakaran.

Tags : Holy Sandalwood ,Vatthalakundu ,Bethaniapuram ,Vattalakundu ,Holy Sandalwood Temple ,Vathalakundu ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...