×

ரூ.56 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

 

சத்தியமங்கலம்,ஜூலை27: சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்குபல்வேறு கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2790 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.7168 க்கும், குறைந்தபட்சமாக ரூ.6350 க்கும் ஏலம் போனது. மொத்தம் 2790 மூட்டை பருத்தி ரூ.56.63 லட்சத்திற்கு விற்பனை ஆனது.இதில் கோவை, அன்னூர், அவிநாசி, புஞ்சைபுளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.கடந்த வாரத்தை விட பருத்தி விலை உயர்ந்து ஏலம் போனது.

The post ரூ.56 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Sathyamangalam Agricultural Producer Cooperative Society ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...