×

நூறு நாள் வேலை திட்ட குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்: எம்எல்ஏ மாங்குடி தகவல்

 

காரைக்குடி, ஜூலை 27: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சங்கராபுரத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளிடம் எம்எல்ஏ மாங்குடி குறைகளை கேட்டு, அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். பின்னர் அவர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் பெண்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காகவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் நலனுக்காக கட்டணமில்லா பேருந்து பயணத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் பெண்களின் வருமானம் உயர்ந்துள்ளது. தற்போது பெண்களின் உரிமைத் தொகை வழங்க முகாம்கள் நடந்து வருகிறது.

விரைவில் அதற்கான தொகையும் உங்களுக்கு வழங்கப்பட உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பில் உள்ள ஒருசில சிரமங்கள் மற்ற பிரச்னைகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நிவர்த்தி செய்யப்படும். இந்த நூறுநாள் வேலை திட்டம் மூலம் ஏராளமான பெண்கள் வாழ்வாதாரம் உயர்ந்ததோடு, அவர்களின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. எட்டக்கனியாக இருந்த உயர்கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக கல்விகடன் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மகத்தான திட்டத்தின் மூலம் பெண்கள் பலரும் பயனடைந்தனர்.என்றார்.

The post நூறு நாள் வேலை திட்ட குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்: எம்எல்ஏ மாங்குடி தகவல் appeared first on Dinakaran.

Tags : MLA ,Mangudi ,Information ,Karaikudi ,Shankarapuram ,Karaikudi, Sivagangai district ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...