×

முத்துப்பேட்டையில் கார்கில் நினைவு தினம் அனுசரிப்பு

 

முத்துப்பேட்டை, ஜூலை 27: கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து அமைப்புகள் சார்பில் முத்துப்பேட்டையில் நேற்று கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக மன்னார்குடி சாலை ரயில்வே கேட்டில் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியப்படி அமைதி பேரணியாக புறப்பட்டு குமரன் பஜார் வழியாக பழைய பேருந்து நிலையம் வந்தனர். பின்னர் அங்கு நடந்த கார்கில் நினைவு கூடத்தில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்ய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் விமானப்படையை சேர்ந்த ராஜ்மோகன் தலைமை வகித்தார். முன்னாள் விமானப்படையை சேர்ந்த பாலசுப்பிரமணியம், முன்னாள் ராணுவத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூத்தகுடிமக்கள் இயக்க தலைவர் பாலசுப்பிரமணியன், வெற்றி தமிழர் பேரவை செயலாளர் சுபசிதம்பரம், அரிமா சங்க தலைவா் நித்தையன் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் கார்கில் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kargil Memorial Day ,Muthuppet ,Muthupettai ,Dinakaran ,
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...