×

சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு இஞ்சிமேடு பெருமாள் கோயிலில்

பெரணமல்லூர், ஜூலை 27: இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு யாகபூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவ மூர்த்தி தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பின்னர் பட்டாச்சாரியார் பாலாஜி தலைமையில் கோயில் வளாகத்தில் யாகவேள்வி வளர்க்கப்பட்டு திருமண தடை, கடன் தொல்லை நீங்கவும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு இஞ்சிமேடு பெருமாள் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Swathi Nakshatra Special Worship ,Inchimedu ,Perumal Temple ,Peranamallur ,Swathi Nakshatra ,Varadaraja Perumal ,Temple ,Inchimedu Perumal Temple ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...