×

கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நாங்குநேரி, ஜூலை27: மறுகால்குறிச்சியில் புது அம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை கோயிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா நாங்குநேரி முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்த பெருமாள் (63) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் இரவில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ.5ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

The post கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Nangkuneri ,New Amman ,Temple ,Maryakkuruchi ,
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்