×

பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும்

சென்னை: மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்க முடியாது என்று ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மேகதாது அணை கட்டப்பட்டால், மொத்தமுள்ள 5 அணைகளிலும் 181 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைத்த பிறகு தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்பதை கர்நாடக அரசு மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால், மொத்தக் கொள்ளளவு 181 டி.எம்.சியைக் கடந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீரை திறந்து விடுவது எல்லாம் அதிசயம் தான். அது எப்போதோ ஒரு முறை தான் நடக்கும். அதனால், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதனால், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

The post பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும் appeared first on Dinakaran.

Tags : BAMA ,Ramadoss ,Tamil Nadu ,Meghadatu Dam ,CHENNAI ,Ramadas ,Bamaga ,Dinakaran ,
× RELATED கந்துவட்டிக் கொடுமையால் அரசு ஊழியர்...