×

சட்டமன்ற நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய தூர்தர்ஷன் மறுத்துவிட்டதாக பேரவை செயலாளர்ஐகோர்ட்டில் பதில்

சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் மறுத்துவிட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை ஆக.22-ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது.

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபடரப்பு செய்யவேண்டும் என லோக் சத்தா கட்சி தரப்பில், ஜெகதீஸ்வரன் என்பவரும் தேமுதிக தரப்பில் விஜயகாந்த் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகள் நிழுவையில் உள்ளது. அந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபொழுது, பேரவை செயலாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யபட்டது. அந்த பதில் மனுவில், அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, சட்டமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யபட்டதாகவும், 110-விதியின் கீழ் நடைபெறும் நிகழ்வுகள், கேள்வி நேரம், உள்ளிட்ட நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யபட்டுள்ளது.

மேலும் முக்கிய தலைவர்கல் பேசகூடிய நிகழ்வுகளும் நேரடி ஒளிபரப்பு செய்யபடுவதாக தெரிவிக்கபட்டது. உடனடி நேரலைக்காக துர்தர்ஷன் தொலைகாட்சிக்கு 2002-ம் ஆண்டு 44.60 கோடி ஒதுக்கீடு செய்யபட்டதாகவும், ஆனால் அந்த நேரலை ஒளிபரப்புக்கு தேவையான ஆப்டிக்கல் பைபர் கேபில் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக முதலில் கூறிய தூர்தர்ஷன் தற்போது நேரலை செய்ய இயலாது என தெரிவித்தாக பேரவை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யபட்ட பதில் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது.

The post சட்டமன்ற நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய தூர்தர்ஷன் மறுத்துவிட்டதாக பேரவை செயலாளர்ஐகோர்ட்டில் பதில் appeared first on Dinakaran.

Tags : Assembly ,Doordarshan ,Chennai ,Assembly Secretary ,Srinivasan ,
× RELATED தூர்தர்ஷன் தொலைக்காட்சியின்...