×

தீயை அணைத்த போது கிரீசில் 2 விமானிகள் பலி

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் சி.எல்-415 என்ற தீயணைக்கும் விமானம் ஒன்று எவியா தீவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. இதில் 2 விமானிகள் இருந்தனர். காட்டுத்தீ மீது தண்ணீரை ஊற்றி விட்டு அந்த விமானம் திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது.

தரையில் மோதிய விமானம் வெடித்து சிதறியதால் தீ பிழம்பு எழுந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகளும் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானிகள் 2 பேர் பலியானதையடுத்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post தீயை அணைத்த போது கிரீசில் 2 விமானிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Greece ,Athens ,Rhodes ,
× RELATED பிரான்சில் வாண வேடிக்கைகளுடன்...