×

பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: சட்டமன்ற நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் மறுத்துவிட்டதாக பேரவை செயலர் சீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை ஆக.22-ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது. நேரலைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய தூர்தர்ஷனுக்கு கடந்த 2022-ல் ரூ.44.65 லட்சம் நிதி அளிக்கப்பட்டது. நேரலை ஒளிபரப்புக்கு கேபிள் அமைக்க ஒன்றிய அரசு நிதிக்காக காத்திருப்பதாக கூறியிருந்தது தூர்தர்ஷன் என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

The post பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,ICourt ,Doordarshan ,Chennai ,Assembly Secretary ,Srinivasan ,High Court ,Tamil Nadu government ,
× RELATED குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு...