×

சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு

 

அவிநாசி, ஜூலை 26: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், திருப்பூர் வடக்கு வட்டாரபோக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயதேவ் அறிவுறுத்தலின்பேரில்  அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை (பொ) ஹேமலதா முன்னிலை வகித்தார். தமிழாசிரியை சந்திரவடிவு வரவேற்றார். அவிநாசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

The post சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Tirupur District ,Collector ,Christraj Uttara ,Tirupur ,North District ,Traffic Inspector ,Jayadev ,Dinakaran ,
× RELATED நீர்வளத்துறை அலுவலகத்தில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு