×

அத்திப்பட்டு முதல் நிலை மற்றும் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை: விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது

 

பொன்னேரி: அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மற்றும் நந்தியம்பாக்கம் ஊராட்சிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் படிவம் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க விண்ணப்பப்படிவம் நேற்று அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவு தொடக்கி வைத்தார். துணைத்தலைவர் எம்.டி.ஜி கதிர்வேல், ஊராட்சிசெயலர் ஆனந்தன், வார்டு உறுப்பினர்கள் கோமதிநாயகம், துளசி பாய்ஸ் சுந்தரம், சந்தியா மூவேந்தன், அஸ்வினி தேவதாஸ் மற்றும் மகளிர் குழுக்கள், மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

உரிமை திட்டம் நேற்று முதல் தொடங்கி வருகிற 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பயனாளிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஊராட்சி தலைவர் மகளிருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனைத்தொடர்ந்து, நந்தியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் உரிமை திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜ் தொடக்கிவைத்தார். கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி செயலர் சுரேஷ், வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், ஏராளமான மகளிர் தங்களது சான்றிதழ்களையும் ஆதாரங்களையும் கொண்டு வந்து பயன்பட்டனர்.

The post அத்திப்பட்டு முதல் நிலை மற்றும் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை: விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Nandiyambakkam ,Ponneri ,Dinakaran ,
× RELATED பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட...