×

திருவிழா நடத்த அனுமதி கேட்டு காவல் நிலையத்தில் மனு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே வெங்கல் காவல் நிலையத்தில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு கொமக்கன்பேடு கிராம மக்கள் மனு கொடுத்தனர். பெரியபாளையம் அருகே வெங்கல் அடுத்த கொமக்கன்பேடு கிராமத்தில் இந்திரா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ரனர். இங்கு ஒவ்வொரு வருடமும் மாரியம்மன் கோயிலுக்கு ஆடி மாதம் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நடத்துவார்கள். ஆனால் இந்த வருடம் ஒரு சிலர் விழாவை தடுப்பதாகவும், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியை நடத்தகூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் கிராம பெரியவர்கள் மற்றும் பெண்கள் நேற்று வெங்கல் காவல் நிலையம் சென்று அங்குள்ள இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்திடம் மனு கொடுத்தனர்.

அதில், எங்கள் ஊரில் மாரியம்மன் கோயிலுக்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் தெரிவித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் திருவிழா நடத்த வருவாய் துறையினர் மற்றும் போலிசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பின்னர் அனுமதி வழங்கப்படும் என கூறினார்.

The post திருவிழா நடத்த அனுமதி கேட்டு காவல் நிலையத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Komakanpedu ,Vengal police station ,Periyapalayam.… ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு