×

கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம் மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மிக்சாரம் பாய்ந்து பசுமாடு பலியானது. கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (50). இவர், கால்நடைகளைவைத்து விவசாயம் செய்கிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இவரது பசுமாடு பிடித்து கொண்டு மேச்சலுக்காக கொண்டு சென்றார். இதில், நேற்று மாலை 5 மணி ஆகியும் மாடு வீட்டுக்குவரவில்லை. வீராசாமி மாட்டை தேடியபோது அறுந்த விழுந்திருந்த மின்கம்பியில் மிதித்து பசுமாடு சம்பவ இடத்திலேயே பலியாகிக்கிடந்ததைக்கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்துகும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம் மின்சாரம் பாய்ந்து பசுமாடு பலி appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Veerasamy ,Redtampedu ,Dinakaran ,
× RELATED எளாவூர் சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு