×

யமுனை ஆற்றில் வலையில் சிக்கிய ‘டால்பினை’ சமைத்து சாப்பிட்ட 4 மீனவர்கள் கைது: தோளில் சுமந்து சென்ற வீடியோ வைரல்

டெல்லி: யமுனை ஆற்றில் வலையில் சிக்கிய டால்பினை பிடித்து சமைத்து சாப்பிட்ட 4 மீனவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியின் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், மீனவர்கள் ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களில் மீன் பிடித்துக் கொண்டுள்ளனர். அவ்வாறு வலையை வீசி மீன்களை பிடிக்கும் போது, அவர்களது வலையில் டால்பின் ஒன்று சிக்கியது. மிகவும் சந்தோஷமடைந்த மீனவர்கள், அவற்றை தங்களது தோளில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிட்டனர்.

தோளில் டால்பினை சுமந்து செல்லும் வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதால், யமுனை ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக டால்பினை பிடித்து சாப்பிட்டதாக கூறி 4 மீனவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து வனக்காப்பாளர் ரவீந்திர குமார் கூறுகையில், ‘நசீர்பூர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், யமுனை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது வலையில் டால்பின் ஒன்று சிக்கியது. அவர்கள் ஆற்றில் இருந்து டால்பினை வெளியே கொண்டு வந்து, தங்களது தோளில் சுமந்து கொண்டு வீட்டிற்குச் சென்றனர். பின்னர் அதனை சமைத்து சாப்பிட்டனர்.

டால்பினை மீனவர்கள் தோளில் எடுத்துச் செல்லும் போது, வழிப்போக்கர்கள் சிலர் அதனை வீடியோவாக எடுத்து வைரலாக்கி உள்ளனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (1972) கீழ், டால்பினை பிடிப்பது குற்றமாகும். அதனால் மீனவர் ரஞ்சீத் குமார் உள்ளிட்ட 4 மீனவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்’ என்றார்.

புதுடெல்லி, ஜூலை 25-
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்காததால், ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனை செய்துவருகின்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சி எம்பிக்கள் 54 பேர் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.

The post யமுனை ஆற்றில் வலையில் சிக்கிய ‘டால்பினை’ சமைத்து சாப்பிட்ட 4 மீனவர்கள் கைது: தோளில் சுமந்து சென்ற வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Yamunai river ,Delhi ,Yamuna River ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...