×

திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு

திருமங்கலம், ஜூலை. 25: திருமங்கலம் மறவன்குளத்தை சேர்ந்தவர் குணசேகரன் (23). இவரது நண்பர் இதே பகுதியை சேர்ந்தவர் முத்தையா (20). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஓட்டலுக்கு செல்ல இரவு டூவீலரில் மறவன்குளத்திலிருந்து திருமங்கலத்திற்கு வந்தனர். திருமங்கலம்- விருதுநகர் ரோட்டில் சினிமா தியேட்டர் அருகே வந்த போது எதிரே ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ், இவர்களது டூவீலரில் மோதியது. இதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்தையா திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவ்விபத்தில் உயிரிழந்த குணசேகரன் மனைவி தனலட்சுமி 8 மாதம் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

பேரையூர் அருகே எஸ்.கண்ணாபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (34). திருமணம் ஆகவில்லை. மதுரையில் உள்ள கூரியர் நிறுவனத்தில வேன் டிரைவாக பணிபுரிந்து வந்தார். பணி முடித்து தனது டூவீலரில் பேரையூர் நோக்கி சென்றார். திருமங்கலம் ராஜபாளையம் ரோட்டில் பழைய ஆர்டிஓ அலுவலகம் அருகே வந்த போது எதிரே வந்த வேன் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் நேற்று இரவு உயிரிழந்தார்.
இந்த இரு விபத்துகள் குறித்தும் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post திருமங்கலம் அருகே வெவ்வேறு விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Gunasekaran ,Tirumangalam Maravankulam ,Muthiah ,
× RELATED திருமங்கலம் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு கலந்தாய்வு துவக்கம்