×

திருத்தாலா அருகே போட்டூர் தர்மசாஸ்தா கோயிலில் யானை ஊட்டு திருவிழா

 

பாலக்காடு, ஜூலை 25: பாலக்காடு மாவட்டம், திருத்தாலா அருகே போட்டூர் தர்மசாஸ்தா கோயிலில் யானை ஊட்டு திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலில் ஆடி மாதத்தையொட்டி யானைகளுக்கு யானை ஊட்டு, கணபதி ஹோமம், கஜ பூஜை, இல்லம் நிறை ஆகிய நிகழ்ச்சி கோயில் தந்தரி நாராயணன் நம்பூதிரி பாட் தலைமையில் மேல் சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரிபாட் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

யானைகளுக்கு கணபதி ஹோமப்பிரசாதம், மூலிகை கலந்து சாப்பாடு உருளைகள், வாழை பழங்கள், தர்பூசணி, கரும்பு, சர்க்கரை, வெல்லம் ஆகியவை பக்தர்கள் யானை பாகன்கள் உதவியுடன் வழங்கினர். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் கவனித்தனர். கேரளாவில் ஆடி மாதம் முழுவதும் யானைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகின்றன.

கேரளாவிலுள்ள முக்கிய கோயில்களில் ஆடிமாதக்காலம் யானைகளுக்கு கஜபூஜை, அஷ்ட திரவ்ய ஹோமம் ஆகியவையுடன் யானை ஊட்டும் நடைபெறுகிறது. இந்நிலையில் திருத்தாலா அருகேயுள்ள போட்டூர் தர்மசாஸ்தா கோயிலில் யானை ஊட்டு விழா வெகு விமர்சையாக நேற்று நடந்தன. இவ்விழாவில் திரளாக பக்தர்கள் கலந்துக கொண்டனர்.

The post திருத்தாலா அருகே போட்டூர் தர்மசாஸ்தா கோயிலில் யானை ஊட்டு திருவிழா appeared first on Dinakaran.

Tags : Elephant feeding festival ,Pottur Dharmashasta Temple ,Thiruthala ,Palakkad ,Elephant feeding ,Bottur Dharmashasta temple ,Tiruthala, ,Palakkad district ,Tiruthala ,
× RELATED திருத்தாலா அருகே கோயில் விழாவில் தங்கச்சங்கிலி திருடிய 2 பெண்கள் கைது