×

அளக்கரை – அரவேனு சாலையோரம் பார்த்தீனியம் களை தாவரம் ஆக்கிரமிப்பு

 

ஊட்டி,மே27: கோத்தகிரி அருகே அளக்கரை – அரவேனு சாலையில் பார்த்தீனியம் தாவரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளதால் கால்நடைகள் மற்றும் வன விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.குன்னூர் அருகே வண்டிசோலை பகுதியில் இருந்து பெள்ளட்டிமட்டம், அளக்கரை வழியாக அரவேனு பகுதிக்கு 11 கி.மீ., தூர சாலை உள்ளது.

இவ்வழியாக சென்றால் கோத்தகிரி பகுதிக்கு செல்லாமல் அரவேனு, குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். இதன் மூலம் சுமார் 3 கி.மீ., தூரம் மிச்சமாகும். இதுதவிர இச்சாலையில் தேயிலை தோட்டங்கள் அதிகளவு உள்ளன. இதுதவிர வனப்பகுதிகளும் உள்ளன.இந்நிலையில் இச்சாலையில் அளக்கரை முதல் அரவேனு வரை சாலையோரங்களிலும்,தேயிலை தோட்டங்களிலும் பார்த்தீனியம் எனப்படும் களை செடி அதிகளவு காணப்படுகிறது.

இதனால் கால்நடைகள் மற்றும் காட்டுமாடு,மான் போன்ற வனவிலங்குகளுக்கு ேபாதிய உணவின்றி தட்டுபாடு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. பார்த்தீனிய செடிகள் நச்சுத்தன்மை வாய்ந்ததால் அவற்றை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.

The post அளக்கரை – அரவேனு சாலையோரம் பார்த்தீனியம் களை தாவரம் ஆக்கிரமிப்பு appeared first on Dinakaran.

Tags : Alakkarai – Aravenu road ,Alakkarai-Aravenu road ,Kothagiri ,Vandisolai ,Coonoor ,Pellattimattam ,Alakkarai ,Aravenu ,Dinakaran ,
× RELATED ஊட்டி – கோத்தகிரி சாலையில் மண்சரிவை தடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு