×

திருவாடானை அருகே அனுமதியின்றி சவடு மண் ஏற்றி வந்த டிரைவர் கைது

திருவாடானை, ஜூலை 25: திருவாடானை அருகே ஊரணிக்கோட்டை கண்மாய் பகுதியில் உள்ள தனிநபர் ஒருவரின் பட்டா நிலத்தில் அனுமதியின்றி சவடு மண் அள்ளுவதாக திருவாடானை வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் மண்டல துணை வட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் டிராக்டரில் சவடு மண் அள்ளி ஏற்றி வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டதில் உரிய அனுமதியின்றி சவடு மண் ஏற்றி வந்தது தெரிய வந்துள்ளது.

அதன் பிறகு சவடு மண் ஏற்றி வந்த டிராக்டரை கைப்பற்றியதுடன் டிரைவரையும் பிடித்து திருவாடானை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் டிராக்டரை பறிமுதல் செய்து டிராக்டர் டிரைவரான திருவாடானை அருகே குருந்தங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (28) என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவாடானை அருகே அனுமதியின்றி சவடு மண் ஏற்றி வந்த டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Uranikottai Kanmai ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...